திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 17 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் பேச்சு.
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 17 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் பேச்சு.
திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று காலை மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில், துணை மேயர் திவ்யா, ஆணையர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின்,
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளரும், 17வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் மாமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார் இதில்
இரட்டை வாய்க்கால் தூர் வாரப்படாமல் புதராக உள்ளது. எனவே உடனடியாக வாய்க்கால் தூர்வாரப்பட்டு அதில் தடுப்பணை கட்ட வேண்டும்.
சத்திய மூர்த்தி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் 80ஆண்டு முன்பு கட்டப்பட்ட குடியிருப்ப இதனை இடிந்து விட்டு புதிய குடியிருப்பு கட்டப்பட வேண்டும்.
முருகன் திரையரங்கம் இரண்டு வருட காலமாக பூட்டப்பட்டுள்ளது இதனை எடுத்துவிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கான திருமண மண்டபம், சமுதாயக்கூடம் அல்லது வணிக வளாகம் கட்டப்பட வேண்டும்.
தாரநல்லூர் கல்மந்தையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 3போர்வெல் உள்ளது. இதில் தற்போது
ஒன்று தான் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.192 குடும்பங்கள் உள்ள இடத்தில் மீதமுள்ள இரண்டு போர்வெல்களை குடிசை மாற்று வாரியமும் எந்த நடவடிக்கையும் எடுத்து சீரமைக்கவில்லை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
வேதாத்திரி நகரில் விரிவாக்க பகுதிகளில் 20ஆண்டுகளாகியும் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை.
இப்பகுதி பொதுமக்கள் உரிய அனுமதி பெற்று கட்டடம் கட்டி, மின்சாரம், தண்ணீர் ஆகியவைக்கு உரிய வரி கட்டி வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மழைநீர் வடிகால் வாரிய அமைத்து தர முன்வர வேண்டும்.
வேதாத்திரி நகரில் அமைந்துள்ள பூங்கா மறுசீரமைப்பு செய்ய 20லட்சம் நிதி வழங்கிய மேயர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது முழுமையான பணி முடிந்து நிலையில் மக்கள் பயன்பாட்டிற்க்கு உடனே திறந்து விட வேண்டும். மேலும், இதற்கு காவலாளி அமைத்து தருமாறு கேட்டு கொள்கிறேன்.
தேவர் பூங்காவில் மரம், செடி, கொடிகள் என புதர்கள் அமைந்துள்ளது. இதனை மாறு சீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.