சிறுமியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது. கோவில்பட்டி போலிசார் தீவிர விசாரணை.

சிறுமியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது. கோவில்பட்டி போலிசார் தீவிர விசாரணை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, இனாம் மணியாச்சி செந்தில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் என்பவரது மகள் லட்சுமி பிரபா. லட்சுமி பிரபா தன்னுடைய மகளான ஹரிணியுடன் கடந்த 21 ந்தேதி கோவில்பட்டி ராஜ் மஹால் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் ஹரிணி கழுத்தில் அணிந்திருந்த 14 கிராம் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதையடுத்து லட்சுமி பிரபா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செயினை பறித்தவர் ராஜூவ் நகர் ஆறாவது தெருவை சேர்ந்த ரத்தினவேல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.