வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கல்லணை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி வரை செல்லும் புதிய பேருந்து சேவையை திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ்  நேற்று கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா, கவுன்சிலர் வக்கீல் பன்னீர்செல்வன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், அண்ணா சிலை விக்டர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்