பெண் வடிவில் பல பெண்கள் ஒன்றிணைந்து பல யோகாசனங்களை 10 நிமிடம் 10 வினாடிகள் தொடர்ந்து யோகாசனங்கள் செய்து உலக சாதனை.
ஓம் ஸ்ரீ சர்வசக்தி யோகா ஃபிட்னஸ் சென்டரின் பத்தாம் ஆண்டு முப்பெரும் விழாவை முன்னிட்டு ஓம் ஸ்ரீ சர்வ சக்தி யோகா ஃபிட்னஸ் சென்டர், மொராய்ஸ் சிட்டியில் உலக பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில்
பெண் வடிவில் பல பெண்கள் ஒன்றிணைந்து பல யோகாசனங்களை 10 நிமிடம் 10 வினாடிகள் தொடர்ந்து யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்தனர். இந்த நிகழ்வு ஜெட்லி புக் ஆப் ரெகார்டில் பதிவு செய்யப்பட்டது.
உலக சாதனைக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் ஜெட்லி புக் ரெக்கார்ட் நிறுவனர் கின்னஸ் டாக்டர் டிராகன் ஜெட்லி அவர்களால் வழங்கப்பட்டது.
இதில்
ஓம் ஸ்ரீ ஜெய கிருஷ்ணா டிரஸ்ட் நிறுவனர் ஜெயமணி கிருஷ்ணசாமி, நிர்வாக இயக்குனர் முத்துலட்சுமி , மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் உலக சாதனை செய்தவர்கள் வாழ்த்து பெற்றனர்