திருச்சி 41-வது வார்டு சோழபுரம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை.

திருச்சி 41-வது வார்டு சோழபுரம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை.

கவுன்சிலர் வக்கீல் கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சி 41-வது வார்டு திருவெறும்பூர் சோழபுரம் பகுதியில் தார் சாலை அமைத்திட பூமி பூஜை போடப்பட்டது. பூமி பூஜையை மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பி. கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஜோசப், வட்ட திமுக செயலாளர் அப்பு என்கிற கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் மணி, பரணி , திமுக நிர்வாகிகள் வெற்றிவேலன், முரளி, செல்வராஜ், சாமிநாதன், ரங்கன், எல் .சேகரன் மற்றும் சோழபுரம் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்