தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா. மாநகராட்சி மேயர் அன்பழகன் பங்கேற்பு.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா. மாநகராட்சி மேயர் அன்பழகன் பங்கேற்பு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாநகரக் கிளை சார்பில் முப்பெரும் விழா, மாநகரத் தலைவர் ஹக்கிம் அலி தலைமையில் நடந்தது. ஓய்வு பெற்றோர் பிரிவின் மாநகர தலைவர் வேளாங்கன்னி முன்னிலை வகித்தார். மாநகரச் செயலாளர் பெர்ஜித் ராஜன் வரவேற்றார்.
மாநிலத் தலைவர் குணசேகரன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பணி நிறைவு பெற்ற 11 ஆசிரியர்கள், சங்க உறுப்பினராக இருந்து புதுக்கோட்டை ஒன்றிய வட்டார கல்வி அலுவலராக பதவி உயர் பெற்ற தலைமை ஆசிரியை ராஜராஜேஸ்வரி ஆகியோரை கவுரவித்து நினைவுப்பரிசுகள் வழங்கி பேசினர். பனானா லீப் உரிமையாளர் மனோகரன், ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கவுரவித்து பேசினார். மாநிலப் பொருளாளர் நீலகண்டன் சிறப்புரை ஆற்றினார். பணி நிறைவு பெற்ற இடைநிலை ஆசிரியை ஆணி சேவியர் ஏற்புரை ஆற்றினார்.
விழாவில், மாநில துணைத் தலைவர் சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள், திருச்சி நகர சரக வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜோசப் அந்தோணி, அர்ஜூன்,
மாநகராட்சி மண்டலடக்குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மருங்காபுரி, தொட்டியம், வையம்பட்டி, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், துறையூர்,முசிறி உள்ளிட்ட அண்டை வட்டாரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநகரப் பொருளாளர் அமுததெரசா நன்றி கூறினார்.