ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி கரையோரம் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வார்கள்.

இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்சி அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் அதிகாலையே குவிந்தனர். அவர்கள் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் வெளிமாவட்டத்தில் இருந்தும் வருவதால் திருச்சி மாநகர காவல் துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கண்காணித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்