திருச்சியில் 2 ஆம் நிலை காவலர் தேர்வில் 191 பெண்கள் பங்கேற்றனர்
திருச்சியில் 2 ஆம் நிலை காவலர்
தேர்வில் 191 பெண்கள் பங்கேற்றனர்.
திருச்சியில் நடந்து வரும் 2 ஆம் நிலை காவலர் தேர்வில், முதல்கட்ட உடற்திறப் போட்டிகளில் தேர்வான 191 பெண்கள் வியாழக்கிழமை அடுத்தக் கட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2 ஆம் நிலை பெண் காவலர் தேர்வு நடந்து வருகிறது. இதில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற வகையில் திருச்சி மாநகர, காவல்துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட 800 பேருக்கான அடுத்தக்கட்ட தேர்வுகள் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற முதல்கட்டத் தேர்வுகளில் 195 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான அடுத்தக்கட்ட உடற்திறத் தேர்வுகள் வியாழக்கிழமை (8ஆம் தேதி) தொடங்கியுள்ளது. இதில் 191 பேர் பங்கேற்றனர். ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், பந்து மற்றும் குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
தேர்வுகள் நடைபெறும் கே கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் மாநகர காவல் ஆணையர் ந. காமின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இத்தேர்வுகள் பிப்ரவரி 10 ஆம் தேதி வரையில் தொடர்ந்து நடைபெறும்.