கடலூரில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவரை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல்.
கடலூரில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவரை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல்.
தஞ்சையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (எம்.எல்) பிரிவின் சார்பில்
வீழ்க பாசிசம், வெல்க
இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன். பின்னர் இரவு 11:30 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்
திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் கலந்து கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்த வாகனம் கடலூர் அருகே விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் சிக்கி திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்துள்ள வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த ரஞ்சன் என்பவரை நேரில் சந்தித்து குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து மருத்துவரிடம் அவரது நிலை குறித்தும், சிகிச்சை குறித்தும் கேட்டு அறிந்து உயரிய சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு, கட்சியினர் ஜோசப், பில்லாசுரேஷ்,
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ரத்தினவேல்ஆறுமுகம், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் வேல்முருகன், துணைச் செயலாளர் இரா.முனியப்பன் உட்பட பலர் ஆகிய உடன் இருந்தனர்.