கல்வி தகுதிக்கு ஏற்ப, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்

கல்வி தகுதிக்கு ஏற்ப, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்

தமிழக அரசுக்கு கோரிக்கை.

திருச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் அழகிரிசாமி தலைமையில் நடந்தது.மாநில துணைத் தலைவர் குபேந்திரன், மாநில பிரசா ரச் செயலர் பொய்யாமொழி, மாநிலச் செயலர் வாசுதேவன், மாவட்டத் தலை வர் ஜம்புநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலர் பிரபு வரவேற் றார். மாநிலப் பொதுச் செயலர் மோகனரங்கன், துணைத் தலைவர் செந்தில் நாதன், தலைமைநிலையச் செயலர் செந் தில்குமார் ஆகியோர் சங்கத்தின் எதிர்காலநடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில், மாநிலம்
முழுவதும் உள்ள சங்க பொதுக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் வறட்சி, மழை, வெள்ளம் உள்ளிட்ட தருணங்களில் கணினி மூலம் பயிர்களை ஆய்வு செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த பதவி உயர்வு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண் டும். கல்வித்தகுதிக்கேற்ப கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். புயல், வெள்ளம், இயற்கை சீற் றம், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலப்பணிகளுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவதுடன், பயணப்படியை இரட்டிப் பாக்க வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடு படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்