மாலையும் கழுத்துமாய் தமன்னா…..ஆன்மிக வாதி ஆகிவிட்டாரா?
மாலையும் கழுத்துமாய் தமன்னா…..ஆன்மிக வாதி ஆகிவிட்டாரா?

நடிகை தமன்னா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அசாம் மாநில தலைநகர் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, தற்போதும் பிஸியான ஒரு நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் சுந்தர் சி யின் ’அரண்மனை 4’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வரும் நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா சென்று வரும் தமன்னா தற்போது அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோயிலுக்கு தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சென்று வழிபாடு செய்துள்ளார்.
கோவிலில் தமன்னா மற்றும் அவருடைய பெற்றோர் உறவினர்கள் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ’எனது அன்புக்குரியவர்களுடன் புனிதமான தருணங்கள்’ என்றும் அவர் கேப்ஷனாக இந்த புகைப்படங்களுக்கு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.