பழங்காலத்தைச் சோ்ந்த கல்லாங்குழிகள் கண்டறியப்பட்டன.
பழங்காலத்தைச் சோ்ந்த கல்லாங்குழிகள் கண்டறியப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம்.
பழனியை அருகே உள்ள பாலசமுத்திரம் குரும்பபட்டி என்னும் ஊரில் தொல் பழங்காலத்தைச் சோ்ந்த கல்லாங்குழிகள் கண்டறியப்பட்டன.

குரும்பபட்டி பவளக்கொடி அம்மன் கோயில் முன்புறம் வயலை ஒட்டிய பாறைப் பகுதியில் இந்தக் கல்லாங்குழிகள் செதுக்கப்பட்டுள்ளன.
23 1 2024 செவ்வாய்க்கிழமை அன்று இக்குழிகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்றது.
நிலவியல் ஆய்வாளா் மணிகண்டபாரத் உதவியுடன் பழனியைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி மற்றும் பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளா் ரொமைன் சைமனல் ஆகியோா் தொடர் ஆய்வுகள் செய்தனர்.
இந்த குழிகள் தற்கால மனிதனுக்கு முந்தைய வகைப்பாடான. ஹோமோ எரெக்டஸ் ( ˌhoʊmoʊəˈrɛktəs / நிமிர்ந்து நிற்கும் மனிதன் “) காலத்தைச் சேர்ந்தது என்று உறுதி செய்தனர்.
சிறியதும் பெரியதுமான 191 குழிகள் உள்ளன.இக்குழிகள் கீழ் பழங்காலத்தைச் சேர்ந்தது என்றும் இதன் காலம்
4 லட்சம் ஆண்டுகள் என்றும் கணித்தனர். இக்குழிகள் உலகின் மூன்றாவது தொல் பழங்காலத்தைச் சேர்ந்தது

என்று ஆய்வாளர் நாரயணமூர்த்தி உறுதி செய்கிறார். இக்குழிகள் செதுக்கப்பட்டதன் காரணம் தெரியவில்லை என்கின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் திண்டுக்கல், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் இவ்வகை கல்லாங்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழினத்தின் தொன்மை பற்றிய ஆய்வுகளுக்கு இந்த கல்லாங்குழிகள் பெரும்பங்கு வகிக்கும் என்றும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொளௌளப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கம்
அகழாய்வில் கண்டறியப்பட்ட முதற்கட்ட
பழையகற்கால (Tower Palaeolithic) கருவிகள் 15 லட்சம் ஆண்டுகள் என்றும், இரண்டாம் கட்ட பழைய கற்கால
(Middle Palaeolithic) கருவிகள்
3,85,000 ஆண்டுகள் பழமையானது என்றும்,
கற்கருவிகளை இயலுலக புவிபரப்பியல் ஒளி ஆய்வு(Cosmogenic-Nuclide Burial Dating Method) செய்ததில் இந்த முடிவுகள் பெறப்பட்டு தமிழகத் தொல்லில் துறையால் ஆவணப்படுத்தப்பட்டுளது
அதே போன்று நுண்கற்காலத்தைச் (Microlithic/Mesolithic Period) கற்கருவிகள்
திருநெல்வேலிப் பகுதியிலும், வைகை
மற்றும் குண்டாறு ஆற்று படுகைகளிலும்,
புதிய கற்காலப் (Neolithic Culture) பண்பாடுகளின் கருவிகள் தமிழகத்தின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் கிடைத்துள்ளன. அதன் அடுத்தக் காலக்கட்டமான இரும்புக் காலத்தைச் சார்ந்த சேலம் வட்டாரத்திலுள்ள மாங்காடு மற்றும்தெலுங்கனூர் ஊரிகளிலுள்ள பெருங்கற்படைஈமச் சின்னங்களில் கண்டறியப்பட்ட மாதிரிகளிலிருந்தும் மயிலாடும்பாறை அகழாய்விலும் இரும்புக் காலம் கி.மு.2000 என காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறாக தொடர்ச்சியாக தொல் மனித குலப்பரவலின் தொல் எச்சங்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாகவே கிடைத்துள்ளது.
ஹோமோ எரக்டஸ் என்னும் நிமிர் மாந்தர் தடயங்களும்.ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் தற்கால மாந்தர் தடயங்களும் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகவே இருப்பதை உறுதி செய்யலாம்.
ஒரு நிலத்தின் இனத்தின் பழங்கால வரலாற்றுத் தொன்மையை தொல்லியல் தரவுகளைக் கொண்டே முடிவு செய்யவேண்டும். அதுவே சரியாக இருக்கும். உலக வரலாற்று அறிஞர்களும் இதையே ஏற்பார்கள்.
நிற்க..
அந்த ஆப்பிரிக்கா ஆரம்பம்.. ஹோமோ சேப்பியன்- மரபணு ஆய்வு
60000 ஆண்டு பீட்சா கதை விரைவில் வலுவிழந்துபோகும் என்றே சொல்லப்படுகிறது.