திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மேயர் அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்பான முறையில் பொது சுகாதார பணிகளை மேற்கொண்ட அலுவலர்களை பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ் பணியாளர்கள் உள்ளிட்ட 25 நபர்களை கௌவுரவித்து பாராட்டி வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மேயர் அன்பழகன்  தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் தமிழகத்தின் தூய்மையான நகரமாக திருச்சிராப்பள்ளி மாநகரம் முதல் இடம் பெற்றதற்கு உறுதுணையாக சிறப்பான முறையில் பொது சுகாதார பணிகளை மேற்கொண்ட அலுவலர்களை பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ் பணியாளர்கள் உள்ளிட்ட 25 நபர்களை கௌவுரவித்து பாராட்டி வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு. இரா.வைத்திநாதன்,இ.ஆ.ப., துணைமேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று (26.01.2024) தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மாநகராட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த 19 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்கள். திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் தூய்மை சேவைகளை மேம்படுத்த இம்மாநகராட்சியில் நடைபெற்ற பொதுசுகாதார பணியின் அர்பணிப்பு முயற்சியால் தேசிய அளவிலான கணக்கெடுப்பு ஸ்வச் சர்வேக்ஷன் 2023 ன்படி தமிழகத்தின் தூய்மையான நகரமாக திருச்சிராப்பள்ளி மாநகரம் முதல் இடம் பெற்றதற்கு உறுதுணையாக இம்மாநகராட்சியில் சிறப்பான முறையில் பொது சுகாதார பணிகளை மேற்கொண்ட அலுவலர்களை பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ் பணியாளர்கள் உள்ளிட்ட 25 நபர்களை கௌவுரவித்து பாராட்டி மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் வழங்கினார்,

எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின், கலை நிகழழ்ச்சி மற்றும் நண்பர்கள் சிலம்பாட்டம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் வழங்கினார்.

பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள், காந்திமார்கெட் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மாநகராட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சிகளில் நகரப்பொறியாளர் திரு.ப.சிவபாதம், நகர் நல அலுவலர் திரு.த.மணிவண்ணன், மண்டலத்தலைவர்கள் திருமதி. ஆண்டாள்ராம்குமார், திரு.மு.மதிவாணன், திருமதி.துர்காதேவி, திருமதி.விஜயலட்சுமி கண்ணன், திருமதி. பு.ஜெயநிர்மலா, துணை ஆணையர் திரு. நாராயணன், செயற் பொறியாளர்கள் , உதவிஆணையர்கள், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள் ,மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்