திருச்சி திருவானைக்காவலில் இன்று பயங்கரம்: பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி தலை துண்டித்து படுகொலை

திருச்சி திருவானைக்காவலில் இன்று பயங்கரம்: பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி தலை துண்டித்து படுகொலை

பழிக்கு பழியாக நடந்ததா?

திருச்சி திருவானைக்காவலில் இன்று அதிகாலையில் பிரபல ரவுடி மண்ணச்சநல்லூர் குணாவின் கூட்டாளி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளது முதலில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

திருச்சி திருவானைக்கோவில் சன்னதி தெரு தீட்சிதர் தோப்பு பகுதியில் இன்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் திருச்சி மண்ணச்சநல்லூர் மேல சீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாதவன் என்கிற மண்டை வெட்டு மாதவன் ( வயது50 ).என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

 இவர் மண்ணச்சநல்லூர் பிரபல ரவுடியான குணாவின் கூட்டாளி ஆவார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி, மேலகொண்டையம்பேட்டை பகுதிக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு வசித்து வந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரை திருவானைக்காவலில் உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து சரமாரியாக வெட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அவரது தலை துண்டித்து கீழே விழும் அளவுக்கு சரமாரியாக கழுத்து மார்பு மற்றும் தலைப்பகுதியில் வெட்டி உள்ளனர். ஆகவே இது பழிக்கு பழியாக நடந்த கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவாணைக்காவல் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் அன்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும்  கொலையாளிகள் ரவுடி கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் திருவரங்கம் போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்