பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை தலைமையில் நடந்தது.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை தலைமையில் நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். பெரம்பலூர் பாராளுமன்ற பொறுப்பாளர் முன்னாள் மேயர். சுஜாதா பூத் கமிட்டி முகவர் கூட்டம் நடத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி காங்கிரஸ் தலைவர் லெனில் பிரசாத். தேசிய ஒருங்கிணைப்பாளர் ரோவர்ஜான்அசோக், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெய பிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியை காங்கிரஸ்
கட்சிக்கோ அல்லது தோழமைக் கட்சிக்கோ கிடைக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வெற்றி பெற செய்வது.
பாரத ஜோடா நீதி யாத்திரையை விளக்கி கிராமங்கள், வட்டாரங்களில் நாள் தோறும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் இளையராஜா, மகளிர் அணி தலைவி செல்வி,மாநில மகளிர் அணி வழக்கறிஞர் மோகனாம்பாள், லயோலா பாரதி ராஜா பிரபு, வட்டாரத் தலைவர்கள் நல்லேந்திரன் பூபாலன், நகரத் தலைவர்கள் ஞானகுரு, இளங்கோவன் சுப்பிரமணியன்,சுந்தர்ராஜ், அணித்தலைவர் ஜான் முகமது, செல்வி, தங்கமணி,
மற்றும் காங்கிரஸ் இளைஞர் கட்சி தொண்டர்கள் மகளிர் அணி, விவசாய அணி,பொறியாளர், வழக்கறிஞர், மருத்துவர் அணி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்