காரின் கதவை திறந்து நின்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்த மோடி. கொடி, தோரணங்கள் விழாக்கோலத்தில் ஸ்ரீரங்கம்.
காரின் கதவை திறந்து நின்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்த மோடி. கொடி, தோரணங்கள் விழாக்கோலத்தில் ஸ்ரீரங்கம்.
மலர்களை தூவி ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்ட மக்கள்

திருவரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே பஞ்சகரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரை இறங்கியது. அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் பிரதமர் மோடி திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ரங்கா ரங்கா கோபுரத்தை அடைந்தார். வழியில் அவர் காரின் கதவை திறந்து நின்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு வந்தார். வழி நெடுகிலும் அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஶ்ரீரங்கம் முழுவதும் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. பொதுமக்கள் வரவேற்பை ஏற்கும் வகையில் பிரதமரின் கார் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. வீடுகளின் மாடிகளில் இருந்தும் பொதுமக்கள் பிரதமருக்கு கையசைத்தபடி வரவேற்பு அளித்தனர். மக்கள் பூக்களை அள்ளி வீசி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஜெய் ஶ்ரீராம் என்று முழக்கமிட்டும் வரவேற்றனர்.

சரியாக 11 மணி அளவில் ரங்கா ரங்கா கோபுரத்தை அடைந்ததும் அங்கு பிரதமருக்கு , அர்ச்சகர்கள், பட்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பெருமாள், தாயார் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.