வெறிச்சோடிய மாட்டுத்தாவணி பேருந்து நிலையம். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி.

வெறிச்சோடிய மாட்டுத்தாவணி பேருந்து நிலையம். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி.

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட நிறைவேற்றப்படாமல் உள்ள கடந்த 8 ஆண்டுகால கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்ககள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில்,  நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.

அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொமுச, ஏஐசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தென் மாவட்டத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையமான மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் என்பது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தத்தால் 900ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில்  இன்று காலை நிலவரப்படி 20 சதவீத பேருந்துகள் கூட இயங்கவில்லை என்று தகவல்  இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்