கூகுள் பே மூலம் பணம் பெற்ற பெண் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்.

கூகுள் பே மூலம் பணம் பெற்ற பெண் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கீழநெட்டூரில் கூகுள் பே மூலம் லஞ்சமாக பணம் பெற்ற பெண் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் வி.ஏ.ஓ., ராக்கு, இவர் அதே ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சரண்யா என்பவரது தாயார் ராஜேஸ்வரிடம் பட்டா வாங்கித் தர ரூ.3 ஆயிரம் கூகுள் பே மூலம் லஞ்சமாக பெற்றுள்ளார்.

இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், இளையான்குடி தாசில்தார் முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். புகார்கள் உறுதியானதையடுத்து ராக்கு மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஆஷா அஜித்திற்கு பரிந்துரை செய்தனர். ராக்குவை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்