நாளை பொங்கல் வைக்க நல்ல நேரம் எது ? ஜோதிடர்கள் விளக்கம்.

நாளை பொங்கல் வைக்க
நல்ல நேரம் எது ? ஜோதிடர்கள் விளக்கம்.

நாளை பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன என்பது குறித்து பிரபல ஜோதிடர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,
இந்த ஆண்டு தைப் பொங்கல் (ஜன. 14) செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 9.03 மணிக்கு தான் தை மாதம் பிறக்க உள்ளது.மேலும் செவ்வாய்க்கிழமைஎன்பதால்  பகல் 3 முதல் மாலை 04.30 வரை தான் ராகு காலம் உள்ளது. அதே சமயம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை எம கண்ட நேரம் உள்ளது. அதனால் வீட்டில் பொங்கல் வைப்பவர்கள் காலை 7.30 முதல் 08.30 வரையிலான நேரத்தில் பொங்கல் வைக்கலாம். அந்த சமயத்தில் பொங்கல் வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் காலை 10.30 முதல் 11.30 வரையிலான நேரத்திலும் பொங்கல் வைத்து, வழிபடலாம்.
பொங்கலிடும்போது பசுஞ்சாணத்தால் மேடை அமைத்து அதில் பசுஞ்சாண பிள்ளையார் வைத்து முதலில் வழிபட வேண்டும். இரண்டு பசுஞ்சாண பிள்ளையார் தயார் செய்து கொள்ள வேண்டும். அவருக்கு மஞ்சள், சந்தன, குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பூசணி பூ போன்றவற்றாலும் மேடையை அலங்கரியுங்கள். பொங்கல் கோலம் வாசலில் போடுவது போல, இம்மேடையில் சூரிய கோலம் வரைய வேண்டும். பின்னர் தலைவாழை இலை போட்டு அதில் காய்கறிகளும், பழங்களும் வைத்து பிள்ளையாரை முதலில் வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.

மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 9.30 முதல் மதியம் 10.30 மணி வரை ஆகும். அதைப்போலவே, மாலை 4:30 முதல் 5 30 மணி வரை மாட்டுப்பொங்கல் வைக்கலாம்.
இவ்வாறு அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்