மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அருகே உள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 29-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அருகே உள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 29-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கி பட்டமளிப்பு விழாவினை தொடங்கி வைத்தார். எம்.பி சு. வெங்கடேசன் பட்டங்களை  மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

இளங்கலை பட்டங்களை 861 மாணவ மாணவிகளுக்கும், முதுகலை பட்டங்களை 151 மாணவ மாணவிகளுக்கும் மொத்தம் 1012 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது .
இதில் தரவரிசைப்பட்டியலில்(Rank Holders) 56 மாணவ மாணவிகள் இடம்பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் ராஜகோபால், துணைத்தலைவர் ஜெயராமன், உதவிச் செயலாளர் ராஜேந்திர பாபு ,பொருளாளர் ஆழ்வார்சாமி ,கல்லூரி முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப்பிரிவு இயக்குநர் பிரபு , கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்