திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக ரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை.
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக ரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை.
திரு.ஜிஎம் ஈஸ்வர ராவ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் திரு. K. P. செபாஸ்டியன் மற்றும் திரு.L .பாஸ்கர், DSP/NIB/CID/Trichy அவர்கள் தலைமையில் இன்று 25.03.2025 திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அங்கத்தினர் ரயில் எண்.12663 ஹவுரா- திருச்சி எக்ஸ்பிரஸ் -ல் சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேற்படி நடவடிக்கையின் போது திருச்சி பிளாட்ஃபார்ம் எண்.03ல் மேற்படி வண்டியின் பொது பெட்டி எண் 245714 ல் சந்தேகத்திற்குரிய இரண்டு கைவிடப்பட்ட பாலித்தீன் மூட்டை கிடந்தது. அதை சோதனை செய்த போது, அதில் 2.500 கிலோ உலர் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பின்னர் விசாரணை செய்த போது அதனை உரிமைக்கோர எவரும் முன் வரவில்லை.
பின்னர் மேற்கூறிய கைப்பற்றப்பட்ட ரூ.50,000/- மதிப்புள்ள 2.500 கிலோ (தோராயமாக) கஞ்சாவை தேவையான சட்ட நடவடிக்கைக்காகவும், அகற்றுவதற்காகவும் திரு.கே.விஸ்வநாதன் SI/NIB/CID/Trichyயிடம் ஒப்படைக்கப்பட்டது.