*வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிஜிபி*

*வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிஜிபி*

தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சுற்றறிக்கை அறிக்கை அனுப்பியுள்ளார்.

அனைத்து காவல்துறை உயரதிகாரிகாரிகளுக்கும் சட்டம்- ஒழுங்கு டிஜிபி அருண் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

“போலீஸ் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர வாகனம், கார்களில் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தங்கள் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக சென்னையில் பிடிபடும் பல கிரிமினல் கும்பல்களிலும் ‘போலீஸ்’ என்று கார்டு வைத்திருக்கும் ஆட்கள் சிக்குவது வாடிக்கையாகி இருக்கிறது. இந்த போலிகள் போலீஸ்காரர்கள் மட்டுமல்ல, வாகனங்களில் பிரஸ் என எழுதி ஓட்டி ஏமாற்றிவருகின்றனர். இதைக்கண்டால் போக்குவரத்து காவலர்களிடமிருந்து எஸ்கேப் ஆகிவிடலாம் என்பது போலி போலீஸ்காரர்களின் தப்புகணக்கு…

இதனால் உண்மையான போலீஸ்காரர்கள் யார் என காவலர்களே குழம்புகின்றன. போலி காவலர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.இந்த சூழலில் தனிப்பட்ட வாகனங்களில் POLICE, காவல் என ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்