தனியார் வேலை வாய்ப்பு முகாம்: திருச்சியில் 424 பேருக்கு பணி நியமன ஆணைகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
தனியார் வேலை வாய்ப்பு முகாம்: திருச்சியில் 424 பேருக்கு பணி நியமன ஆணைகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்ப்பட்ட 424 பேருக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை ஆமைச்சர் ஆன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில்நெறி வழிகாட்டி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஆன்பில் ஆறக்கட்டளை, தமிழ்நாடு மாநில எரக, நகர்ப்புற வாழ்வாதார ஈயக்கம் ஆகியவை ஈணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு சேஷாயி தொழில்நுட்ப பயிலக வளாகத்தில் நடைபெற்ற ஈந்த முகாமில், 200 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.
ஆட்டோ மொபைல், தகவல் தொடர்பு, வணிக சந்தை, ஜவுளி, மெக்கானிக்கல், விற்பனை பிரதிநிதி, நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தேர்வு செய்தனர். 2,497 ஆண்கள், 1,591 பெண்கள், 35 மாற்றுத் திறனாளிகள் ஏன மொத்தம் 4,088 பேர் வேலை கேட்டு விண்ணப்பங்களை வழங்கினர்.
நேர்காணலில் பங்கேற்பதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வந்திருந்த நிறுவனங்கள் மற்றும் தேவைப்படும் ஆள்கள், ஏன்ன பணி ஏன்பது குறித்து அறிந்து கொள்ள வளாகத்திலேயே பிரமாண்ட ஆறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. வேலைநாடுநர்களுக்கு நேர்காணல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன..அந்தந்த நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆலுவலர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள், இளம்பெண்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முகாம் இடத்திலேயே பணி நியமன ஆணைகளை வழங்கினார். 8 மாற்றுத்திறனாளிகள் ஊள்பட 424 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், 587 பேர் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முகாமில், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் சார்பில் இலவச திறன் பயிற்சிக்கு விருப்பமானோர் தேர்வு செய்யப்பட்டனர். 35 பேர் திறன் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்த முகாமில், மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் மு. மதிவாணன், மகளிர் திட்ட இயக்குநர் சுரேஷ், வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன துணை ஈயக்குநர் மகாராணி, மாவட்ட வேலைவாய்ப்பு ஆலுவலர் மாசில் இஷா, சேஷாயி தொழில்நுட்பப் பயிலகத்தின் நிர்வாகி ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.