திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பூச்சிநாயக்கம்பட்டி பகுதியில் முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. இதில் இரு தரப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடின் காரணமாக கோயில் மீது ஒரு தரப்பினர் திருப்பதி, சின்னையன், அழகர்சாமி,ராஜகோபல் வழக்கு தொடர்ந்து துணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இது சம்மந்தமாக விசாரித்து துணை நீதிமன்றம் தீர்ப்பு 19.2.2024 அன்று பொதுமக்களுக்கு பாத்தியப்பட்டது என்று தீர்ப்பானையே வெளியிட்டது
இதைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அக் கோயிலில் வழிபாடு செய்ய சென்ற போது கோயிலை திறக்க மறுத்துள்ளனர் இதனால் அப்பகுதி மக்கள் கோயிலை திறக்க சொல்லி சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கடந்து சென்ற போது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு குறைகளை கூறினார்கள். அதை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொதுமக்களுக்கு வாக்குறுதி கொடுத்து சென்றார் இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.