மலேசியாவில் மரணமடைந்தவர் உடலை சொந்த ஊருக்கு அனுப்ப உதவிய அயலக அணியினர்.

மலேசியாவில் மரணமடைந்தவர் உடலை சொந்த ஊருக்கு அனுப்ப உதவிய அயலக அணியினர்.

நாகை மாவட்டம் கரியாப்பட்டினத்தைச் சார்ந்த முகமது சித்திக் என்பவர் மலேசியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது  கடந்த 30 ம் தேதி மாரடைப்பால் காலமானார் . அதன் அடிப்படையில் நேற்று ஏர் ஏசியா விமானம் மூலம் மாலை 6:30 மணி அளவில் முகமது சித்திக் உடல் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் உத்தரவின் பேரிலும் மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் அவர்களின் ஆலோசனின் பேரிலும் திமுக அயலக அணியின் பொறுப்பாளர்கள் சவுதி சவுக்கத் மற்றும் காதர் மொய்தின் அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு மழையையும் பொருட்படுத்தாமல் தேவையான உதவிகளை செய்து உடலை பெற்று தமிழக அரசின் கட்டணம் இல்லா அமரர் உறுதி மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் திமுக அயலக அணியின் மனிதாபிமான செயல்பாடுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்