சிவகங்கை மக்களவை தொகுதிக்குட்பட்ட, ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன் ஆகியோர் வாக்கு சேகரிப்பு .
சிவகங்கை மக்களவை தொகுதிக்குட்பட்ட, ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன் ஆகியோர் வாக்கு சேகரிப்பு .

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திரு. கார்த்திக் ப. சிதம்பரம் அவர்களை ஆதரித்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி திருவரங்குளம் ஒன்றிய ஊராட்சி பகுதியில் பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர், தெற்கு மாவட்டச் செயலாளர் திரு எஸ்.ரகுபதி அவர்களும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி பரப்புரை மேற்கொண்டு INDIA கூட்டணி சார்பில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

உடன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக சார்பு அணிகளில் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்