பிரபலத்தின் வாரிசு போதுமா..தொகுதியை மேம்படுத்தப் போகும் மத்திய அமைச்சர் தேவையா..பெரம்பலூர் தொகுதி மக்கள் அறிவார்ந்த முடிவு எடுக்க வேண்டும்..

பிரபலத்தின் வாரிசு போதுமா..தொகுதியை மேம்படுத்தப் போகும் மத்திய அமைச்சர் தேவையா..பெரம்பலூர் தொகுதி மக்கள் அறிவார்ந்த முடிவு எடுக்க வேண்டும்..

டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி வேண்டுகோள்.

மதச்சார்பற்ற ஜனதாதள மாநில துணை தலைவரும், திரைப்பட கதாசிரியருமான டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசினார்..அப்போது அவர் கூறியதாவது

கரோனா காலகட்டத்தில் தனது சொந்த செலவில் தேவையான உணவு பொருட்களை விநியோகித்தவர் பாரிவேந்தர் ஐயா.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வருடத்திற்கு தலா ஐம்பது மாணவசெல்வங்களுக்கு தனது கல்வி நிறுவன த்தில் இலவச உயர் கல்விக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தியவர்.

பெரம்பலூர்-நாமக்கல் ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வைத் தொடங்கியது, விவசாயிகளுக்கான கிசான் ரயில் திட்டத்திற்காக ஏற்பாடு செய்தது தொகுதியில் இலவச மருத்துவ சேவைக்காக ஏற்பாடு செய்தது பாரிவேந்தரின் சாதனைகள்.

மேலும் மத்திய அமைச்சராகி இந்த தொகுதிக்கு நிறைய செய்ய இலட்சியம் கொண்ட அவருக்கு பெரம்பலூர் தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டியது அவசியம்.

ஜமால் முஹம்மது கல்லூரியில் தான் பயின்ற காலங்கள் ,என்.எஸ்.எஸ் பங்கேற்பும் அதில் ரன்னிங் போன இடத்தின் அருகில் அந்த நினைவாகவே எஸ்ஆர்எம் ஹோட்டல் கட்டியது போன்ற பழசை மறக்காத பத்தரை மாத்துத் தங்கம் அவர்..

இவ்வாறு அவர் கூறினார்..

மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்