கோவில் பண முறைகேடு தொடர்பாக புகார் அளித்தவரை தாக்கிய அண்ணன் தம்பி கைது. ஜம்புநாதபுரம் காவல் நிலையம் அருகே பரபரப்பு.

கோவில் பண முறைகேடு தொடர்பாக புகார் அளித்தவரை
தாக்கிய அண்ணன் தம்பி கைது.
ஜம்புநாதபுரம் காவல் நிலையம் அருகே பரபரப்பு.

திருச்சி முசிறி வலை எடுப்பு பகுதியைச் சேர்ந்தவர் சேவுகன் (வயது 55 ) முசிறி
துளையாநத்தம்
பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (55) இவரின் அண்ணன் குணசீலன் (56).
இவர்கள் அங்கு அமைந்துள்ள அருள்மிகு புற்றடி பெருமாள் கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்தனர்.இந்த கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது அண்ணன் குணசீலன் ஆகியோர் மீது பண முறைகேடு புகார் எழுந்தது. பின்னர் சேவுகன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் 2 பேர் மீதும் ஜம்புநாதபுரம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர். ஸ்ரீகாந்த் மற்றும் குணசீலன் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு சென்றனர். பின்னர் காவல் நிலையத்துக்கு அருகாமையில் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து புகார் கொடுத்த சேவுகனை
தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சேவுகனை கோவில் நிர்வாகத்தினர் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீகாந்த், குணசீலன் ஆகிய இரண்டு பேரையும் ஜம்புநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்