கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கருத்தரங்கம் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தலைமையில் இன்று திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் பள்ளியில் நடந்தது
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கருத்தரங்கம்
அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தலைமையில் இன்று திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் பள்ளியில் நடந்தது
திருச்சி கி. ஆ. பெ. விஸ்வநாதன் மேல்நிலைப் பள்ளியில் இன்று கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சட்டமன்ற நாயகர் கலைஞர் எனும் தலைப்பில் கருத்தரங்கு அரசு தலைமைக்கொறட கோ. வி. செழியன் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ,மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன் ,.ஸ்டாலின்குமார் , மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் .இராஜேந்திரன் வருவாய் கோட்டாட்சியர் .பார்த்திபன் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா , அரசு சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் .ரவிச்சந்திரன் , மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.