ஆபத்தில் இருந்து காப்பாற்றிய தென்காசி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு.

ஆபத்தில் இருந்து காப்பாற்றிய தென்காசி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு.

தென்காசி மாவட்டத்தில் தற்போது பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்காசி நகரம் மலையான் தெரு பகுதியில் மண் வீட்டில் வசித்து வரும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தென்காசி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் அப்பகுதியில் சோதனை இட்டதில் மண் வீடுகள் இடியக்கூடும் என்ற அச்சம் நிலவிய நிலையில் அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி 26 பெண்கள் மற்றும் குழந்தைகளை அப்பகுதி சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்த காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்