திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.*
*திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.*
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூனிட்டேஷன் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு ஒய்வுற்ற பிறகும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர். எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை 10 மணி அளவில் இருந்து நடைபெற்று வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.