ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. தலைமை ஆசிரியரின் திமுக பாசம். சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. தலைமை ஆசிரியரின் திமுக பாசம்.
சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ரோஜா வினோதினி கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். திமுக ஆட்சி காலத்திலேயே கடந்த ஆண்டு பள்ளி விழாக்களை எல்லாம் இவர் திமுக விழாக்கள் போல் நடத்தியதாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறதாகவும் சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இவர் மீது பள்ளியில் ஏராளமான குற்றச்சாட்டுகளை பொதுமக்களும் அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக ஆட்சி முடிவுற்று தமிழக வெற்றிக்கழக ஆட்சி பொறுப்பேற்றும் இவருடைய செயல்பாடுகள் எதுவும் மாறவில்லை என்கிறார்கள். திமுக விசுவாசியாகவே செயல்பட்டு வருகிறாராம். கடந்தாண்டே முடிந்து போன பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினரை வைத்துக்கொண்டு பள்ளி வளாகத்தை திமுக அரசியல் மேடையாக பயன் படுத்தி வருவதாக சொல்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஒரு சுற்றறிக்கை மூலம் எந்த அரசு பள்ளி விழாக்களிலும் அரசியல் கட்சிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தும் 15 .7 .2026. காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பள்ளியில் திமுக பிரமுகர்களை மட்டும் அழைத்து காமராஜர் பிறந்த நாள் விழாவை திமுக பிரச்சார மேடையாக பயன்படுத்தி உள்ளாராம். இது பற்றி அங்கு சென்ற பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டபோது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில்தான் நான் செயல்படுகிறேன் எதுவாகஇருந்தாலும் நீங்கள் அங்கு பேசிக் கொள்ளுங்கள் என்று கறாராக கூறுகிறாராம்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சம்பவங்களே உதாரணம். ஆதலால் மேற்படி தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.