கடலில் தவறி விழுந்த இளைஞர் பத்திரமாக_திரும்பினார்.

கடலில் தவறி விழுந்த இளைஞர் பத்திரமாக_திரும்பினார்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 20ம் தேதி சனிக்கிழமை சாயங்காலம் படகில் சென்றவர்கள் அனைவரும் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 14 வது கடல் மைல் தூரத்தில் படகு வந்துகொண்டிருந்த நிலையில் சிவமுருகன் மட்டும் படகின் வெளிப்புறம் வந்திருக்கிறார். இரவு சுமார் 7 மணியளவில் எதிர்பாராத விதமாக அவர் நடுக்கடலில் தவறி விழுந்து விட்டார். இதை அந்த நேரத்தில் படகில் இருந்த யாரும் கவனிக்க வில்லை.

அவர் கடலில் விழுந்த கால்மணி நேரத்திற்கு அப்பால் அதே படகில் சென்ற சிவமுருகனின் உடன்பிறந்த தம்பி சுரேஷ் அண்ணன் படகில் இல்லாததை கவனிக்க தொடங்கியிருக்கிறார். பின்னர் படகு முழுக்க தேடியும் அவர் அங்கு இல்லாததால் அவர் கடலில் விழுந்ததை உறுதி செய்துவிட்டு அப்போதிலிருந்தே திரும்ப அவர்கள் வந்த கடல் பகுதிக்கு படகை திருப்பி தேடத் தொடங்கி இருக்கிறார்கள். 25க்கும் மேற்ப்பட்ட படகுகள் மூலம் இரவு முழுக்க அவரை தேடியும் சிவமுருகன் கிடைக்கவில்லை. திரும்ப ஞாயிற்றுகிழமை கரைக்கு வந்து படகுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு திரும்பவும் பகல் ஒரு மணி வரையில் தேடி இருக்கிறார்கள். சிவமுருகன் எங்கேயும் கிடைக்கவில்லை.

கூத்தங்குழி மீனவர்கள் கடல் மேல் 3 மணி நேர பயணத்திற்கு பின்பு மீன் பிடித்து கொண்டிருந்த வேலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடுக்கடலில் தனியாக நீந்தி கொண்டிருக்கும் போது சிவமுருகன் நடுக்கடலில் அவர்களுடைய கண்ணில் சிக்கி இருக்கிறார். அவரை பத்திரமாக மீட்டு அவர்களுடைய நாட்டுப்படகில் உண்பதற்காக கொண்டு சென்ற உணவை கொடுத்து அவரை ஓய்வு எடுக்க வைத்து அவர்களும் மீன்பிடித்து விட்டு திங்கள்கிழமை காலை கரைக்கு திரும்பிய பின் செட்டிகுளத்தை சேர்ந்த அவருடைய உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் தந்திருக்கிறார்கள். சிவமுருகன் நம்முடன் திரும்பினார்.

திரும்பவே வாய்ப்பில்லை என உறவினர்கள் சக மீனவர்கள் என 99 சதம் பேர் உறுதியாக கூறிய நிலையில், 32 மணிநேரம் தன்னந்தனியாக நீந்தி சிவ முருகன் நம்மிடம் நலமுடன் இருக்கிறார் அவர் பெற்ற பிள்ளையை தோழில் சுமந்து கொண்டு💐💐

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்