சதுரகிரி மலை அடிவாரத்தில் ஒரு சிவாலயம் கட்ட வேண்டும்! ஜோதிமலை இறைபணி நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை.
சதுரகிரி மலை அடிவாரத்தில் ஒரு சிவாலயம் கட்ட வேண்டும்!
ஜோதிமலை இறைபணி நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை.
வரும் காலங்களில் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலை அடிவாரத்தில் ஒரு சிவாலயம் கட்டினால், பக்தர்களின் மன நிறைவான தரிசனத்திற்கு சிவாலயம் உதவும்.
குறிப்பாக பெருமழை, காட்டு வெள்ளம் ஏற்பட்டு, வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையால் பக்தர்களுக்கு
மலை ஏற அனுமதி மறுக்கப்படும் காலங்களில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.
இந்த நிலையில் தான் மலை அடிவாரத்தில் ஒரு கோயில் இருந்தால் இறை தரிசனம் செய்து, ஆத்ம திருப்தியோடு பக்தர்கள் திரும்புவார்கள்.
பழனி மலை அடிவாரத்திலும், வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்திலும் கோயில்கள் அமைந்துள்ளது போல, சதுரகிரி மலையின் அடிவாரத்திலும் கோயில் தேவை. எனவே, இந்து சமய அறநிலையத்துறை
சதுரகிரி மலை அடிவாரத்தில் புதிதாக ஒரு சிவன்கோயில் எழுப்ப வேண்டும். என்று கும்பகோணத்தை சேர்ந்த தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள், கோரிக்கை வைத்துள்ளார்.