திருச்சி 28 வது வார்டு அண்ணா நகர் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் அமைச்சர் கே என் நேருவிடம் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கோரிக்கை மனு.

திருச்சி 28 வது வார்டு அண்ணா நகர் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் அமைச்சர் கே என் நேருவிடம் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கோரிக்கை மனு.

திருச்சியில் அமைச்சர் கே.என். நேருவை மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் மஜக-வினர் சந்தித்தனர்.

அப்போது இளைஞர் அணியின் மாநிலச் செயலாளர் திருச்சி ஷெரீப் அவர்களும் உடன் சென்றிருந்தார்.
நிர்வாகிகள் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கொடுத்த மனுவில் , திருச்சி மாநகரில் 28-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீர் செய்து தருமாறு கூறியிருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கே என் நேரு உடனடியாக அந்த விளையாட்டு மைதானத்தில் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் அவை தலைவர் மிர்பஹா ஷேக் தாவூத், மாவட்டத் துணைச் செயலாளர் தர்வேஸ், சேக் அப்துல்லா, சுரேஷ் காந்தி உள்ளிட்ட மாவட்ட, அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்