பதிவெண் பொருத்தப்படாத 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல், ரூ.67500 அபராதம் விதிப்பு.

பதிவெண் பொருத்தப்படாத 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல், ரூ.67500 அபராதம் விதிப்பு.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.சுந்தரவதனம் I.P.S.,* அவர்களின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் *திரு. லலித் குமார் I.P.S.,* அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவலர்கள் மாநகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, பதிவு எண் தகடு பொருத்தப்படாமல் ஓட்டி வரப்பட்ட 8 வாகனங்கள் அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த இளைஞர்களுக்கு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அபாயகரமாக (rash) வாகனம் ஓட்டுதல், மூன்று நபர்கள் பயணம் செய்தல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல்,அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் பயன்படுத்தியது ஆகிய மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் ₹67500 அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்