பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நெல்லை ரயில் நிலையத்தில் திடீர் சோதனை

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நெல்லை ரயில் நிலையத்தில் திடீர் சோதனை

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடைபெற்றது.

வாகன காப்பகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ரயில் பயணிகளின் உடைமைகள், மற்றும் ரயில்களில் நெல்லை சந்திப்பு இருப்பு பாதை ரயில்வே காவல்நிலைய காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் ரயில்வே காவல்நிலைய காவல் ஆய்வாளர் ப்ரவீன்குமார் தலைமையிலான காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு ஏதேனும் இருக்கிறதா எனவும் சோதனை செய்தனர்.

அப்போது வெடிமருந்து மோப்பநாய் பிரிவு சரவணன், சுப்பிரமணி மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்