திருச்சி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டதலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் நடந்தது

திருச்சி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டதலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் நடந்தது.

திருச்சி மாவட்ட வணிகர் சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வணிகர் சங்க பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி. பாபு தலைமை தாங்கினார், கூட்டத்தில் பொருளாளராக மட்டன் மற்றும் கோழி, மீன் இறைச்சி கடை சங்க பொருளாளர் அப்துல் ஹக்கீம் தேர்வு செய்யப்பட்டார்.

இளைஞர் அணி தலைவராக திருச்சி கோபால், செயலாளராக எம்.பி குரூப்ஸ் முகமது மைதீன்,பொருளாளராக திருவானைக்கோவில் அரவிந்த். துணைத் தலைவர்களாக எடமலைப்பட்டி புதூர் பழ பூபதி, பெரியசாமி டவர்ஸ் கிருஷ்ணன், குளித்தலை கீதா கணேசன் என்ற தண்டபாணி ஆகியோ தேர்வு செய்யப்பட்டனர் கூட்டத்தில் திருவானைக்கோவில் வணிகர் சங்க தலைவர் வெற்றிவேல் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்