ஆராய்ச்சிகள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும். நூலகவாரவிழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு.
ஆராய்ச்சிகள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும். நூலகவாரவிழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு.
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக நுாலக கல்வியியல் சார்பில் நுாலக வார விழா மற்றும் பயிற்சி பட்டறை நடந்தது.
பல்கலைகழக துணைவேந்தர் செல்வம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:- ஆக்கபூர்வமாகவும், முழு முயற்சியுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டால் வெற்றி உறுதியாக கிடைக்கும். இதுபோன்ற ஆராய்ச்சி உத்திகள், தொழில்நுணக்க மேம்பாடுகள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபடுவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் தரவுகளை உருவாக்க வேண்டும். பயிற்சி பட்டறை மூலமாக தேசிய மற்றும் பண்ணாட்டு அளவிலான ஆராய்ச்சி தரவுகள் அனைத்து மாணவர்களும் அணுகம் வரையில் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு சிறிய கருவி, எனவே அதனை அதிக அளவில் சார்ந்திருக்க கூடாது. மனித நுண்ணறிவே அனைத்திலும் மேம்பட்டது என்றார்.
நிறைவு விழாவில் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு பல்கலைகழக பதிவாளர் காளிதாசன் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தியாகராசர் கல்வியியல் கல்லுாரி தலைமை நுாலகர் சுந்தர் வினாடி வினா நடத்தினார். நிகழ்ச்சியில் நுாலகர் மற்றும் முதுநிலை பேராசிரியர் சீனிவாசராகவன் உட்படபலர் பேசினர். பேராசிரியர் அரங்கநாதன் நன்றி கூறினார்.