கன்னியாகுமரி மாவட்டத்தில் கனஜோராக விற்கப்படும் கொலு பொம்மைகள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனஜோராக விற்கப்படும் கொலு பொம்மைகள்.
கன்னியாகுமரி மாவட்டம் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் கொலு பொம்மைகள் விற்பனை துவக்கம்.ஒரு பொம்மை ரூ.60 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்று நவராத்திரி விழாவின் போது கொலு பொம்மைகள் வைப்பது பூஜை மற்றும் வழிபாடு செய்வது வழக்கம் இந்த ஆண்டு நவராத்திரி விழா அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்குகிறது இதைத் தொடர்ந்து பன்னிரண்டாம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கொழு பொம்மைகள் விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் கட்டபொம்மன் சந்திப்பு வடசேரி கிருஷ்ணன் கோவில் மற்றும் பார்வதிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் கொலு பொம்மைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன அந்த பொம்மைகள் ரூபாய் 60 தொடங்கி 700 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.