விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர்கள் ஐக்கியப் பேரவையின் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர்கள் ஐக்கியப் பேரவையின் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர்கள் அக்கியப் பேரவையின் சார்பில் திருச்சி மண்டல ஒருங்கிணைக்கும் 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட பேரவை செயலாளர் அண்ணாதுரை தலைமையில் ஜங்ஷன் காதி கிராப் அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன் சிறப்புரையாற்றினார்
ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் அய்க்கப் பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் ரவிக்குமார், ஜெய்சங்கர், செந்தில்குமார், பாக்கியராஜ், மாநில துணை செயலாளர்கள் கணேச.பழனிவேல், ராஜா, செல்வகுமார், மற்றும் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன், பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் சந்திரசேகரன், பெல் தொழிற்சங்க பொதுச் செயலாளர் விஜயபாலு, மாவட்ட நிதி செயலாளர் மருகரை கண்ணதாசன், திருவெறும்பூர் வட்ட பேரவை தலைவர் சந்திரகுமார் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது
பட்டியல் பழங்குடி வகுப்பு அரசு பணியாளர்கள் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடைக்க இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவு 16 (4) ஏ பயன்படுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும்,
அரசு ஊழியர் அய்க்கப் பேரவைக்கு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் வழங்கி பேரவைக்கு தலைமை அலுவலகம் சென்னையில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.