ஜமாஅத்தே இஸ்லாமிஹிந்த் மகளிர் அணி சார்பில் மனித சங்கிலி திருச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு.

ஜமாஅத்தே இஸ்லாமிஹிந்த் மகளிர் அணி சார்பில் மனித சங்கிலி திருச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு.

மது, போதை,ஆபாசம், பாலியல் வன்கொடுமை மற்றும் தவறான உறவுகள் என பெருகும் ஒழுக்க கேடுகளில் இருந்து மக்களை காப்போம் என்ற விழிப்புணர்வு மனித சங்கிலி போராட்டம் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பில் திருச்சியில் நடந்தது. திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் மேலப்புதூர் வரை நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தலைமை தாங்கினார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மக்கள் தொடர்பு செயலாளர் நவாஸ் கான், மாவட்டத் தலைவர் ஹஜ் மொய்தீன், வெல்பர் கட்சி மாவட்ட தலைவர் சிராஜுதீன், எஸ்.ஐ.ஓ.தலைவர் அஜிஸ், இளைஞர் அமைப்பு தலைவர் ரியாஸ் உள்படஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்