திருச்சி மன்னார்புரத்தில் தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்.
திருச்சி மன்னார்புரத்தில் தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்.
தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திருச்சி பெருநகர் வட்ட செயற்குழு கூட்டம் மன்னார்புரத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெருநகர் வட்ட தலைவர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் நாகை க. செல்வராஜூ சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடன் துவக்க வேண்டும், விடுபட்டுப் போன ஒப்பந்த தொழிலா ளர்களை, தேர்வு செய்ய வேண்டும். பணி வழங்காமல் உள்ள 5000 கேங்க்மேன்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழக்க வேண்டும்.
56,000 காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், கேங்க்மேன்களை சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என் மன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் திருச்சி பெருநகர் வட்ட தலைவராக எச். சத்தியநாராயணன், செயலாளராக சிவ. செல்வன், பொருளாளராக செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பெரம்பலூர் கனி, புதுகை குமார், கரூர் முருகவேல், நாகை சாரதி, மணி, செந்தில்குமார், அர்ஜுன், கண்ணன், அன்புச்செல்வன், அன்பழகன், மகளிர் அணி செயலாளர் ஜெசிந்தாமேரி, சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திருச்சி மண்டல செயலாளர் க. காளிதாஸ் நன்றி கூறினார்.