சேர்மன் அருணாசலம் ஐயா கோவில் கும்பாபிஷேகம் விழா.
சேர்மன் அருணாசலம் ஐயா கோவில் கும்பாபிஷேகம் விழா.

தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதியில் சுயம்பு லிங்கமாக ஜீவித்து, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் லெட்சுமி நகரில் சுயஉருவில் ஆட்சி செய்யும், அவனி காக்கும் ஒர் அவதாரம் ஸ்ரீலஸ்ரீசித்தர் சேர்மன் அருணாசலம் ஐயா சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 6-ந்தேதி காலை கணபதிஹோமம், தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
7-ந்தேதி காலை இரண்டாம்கால யாகபூஜை, மண்டபார்சனை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், மாலை மூன்றாம்கால யாக பூஜை, பூர்ணாஹுதி, தீபாரதனை நடைபெற்றது.
8ம் தேதி காலை 8 மணிக்கு மேல் நான்காம்கால யாக பூஜை, வேதபாராயணம், சகஸ்ர நாமம், நாடி சந்தானம், யாத்ரா தானம் மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, மங்கள வாத்தியத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10.15 மணிக்கு மூலஸ்தானம் மஹா கும்பாபிஷேகம் மற்றும் பரிவார தெய்வங்களான அற்புத விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுந்தரேஸ்வர முருகன், வீரஆஞ்சநேயர், நவகிரக சன்னதிகளில் மஹா கும்பாபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், ஜெயகிரி அம்மாள் மற்றும் கோவில் ஊழியர்கள், குருசேர்மா சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.