தொடர் செல்போன் திருட்டு திருச்சியில் பரபரப்பு சம்பவம். பொதுமக்கள் சுற்றி வளைத்து போலீசாரிடம் ஒப்படைப்பு.

தொடர் செல்போன் திருட்டு திருச்சியில் பரபரப்பு சம்பவம். பொதுமக்கள் சுற்றி வளைத்து போலீசாரிடம் ஒப்படைப்பு.

சிவகாசியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் தேர்வு எழுதுவதற்காக இன்று திருச்சி வந்தார். திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற்ற தேர்வுக்கு செல்வதற்காக மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
திருச்சி தலைமை தபால் நிலையம் போக்குவரத்து சிக்னலில் அந்த பேருந்து நின்றது. அப்போது சிவகாசியை சேர்ந்தவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஒருவர் தப்பி ஓடினார்.

பேருந்து சிக்னலில் நின்று கொண்டு இருந்ததால் சிவகாசி நபரின் சத்தம் கேட்டு பேருந்தில் இருந்தவர்கள் மற்றும் அருகே இருந்த இளைஞர்கள் அந்த செல்போன் திருடனை விரட்டி சென்றனர். அப்பொழுது அந்த திருடன் தலைமை தபால் நிலைய வளாகத்திற்குள் நுழைய முயன்ற செல்போன் திருடன் பொதுமக்களிடம் சிக்கினான்.

தலைமை தபால் நிலையம் இன்று விடுமுறை என்பதால் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. இதனால் திருடன் தப்பிச் செல்ல முடியாமல் சிக்கினான். அவனிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தகவல் அறிந்த கண்ட்டோன்மென்ட் குற்ற பிரிவு காவல் துறையினர் விரைந்து வந்து செல்போன் திருடனை விசாரித்து சோதனையிட்டனர்.

அப்போது செல்போன் திருடனிடம் மேலும் ஒரு உயர்ரக ஸ்மார்ட்போன் இருந்தது. அது குறித்து போலீசார் விசாரித்த போது அது தனது போன் என்று செல்போன் திருடன் கூறியுள்ளான். சிறிது நேரத்தில் அந்த செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதை போலீசார் எடுத்து பேசிய போது மத்திய பேருந்து நிலையம் புறக்காவல் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் ஒருவர் பேசியுள்ளார்.

அப்போது அந்த குறிப்பிட்ட செல்போன் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரிடம் மத்திய பேருந்து நிலையத்தில் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் செல்போன் திருடனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். செல்போன் திருடனுடன் மேலும் இரண்டு பேர் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த இருவரும் தப்பி சென்று விட்டதாக செல்போன் திருடன் தெரிவித்துள்ளான்.

இதைத் தொடர்ந்து போலீசார் செல்போன் திருடனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்