2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்.

2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், முன்னாள் அமைச்சர் பூனாட்சி,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இலக்கிய அணி ஜெயம் ஸ்ரீதர், மாணவர் அணி அறிவழகன், ஜெயலலிதா பேரவை அய்யம்பாளையம் ரமேஷ்,ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி.முத்து கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ்,இன்ஜினியர் ஜெயக்குமார், ஆதாளி,நிர்வாகிகள் சமயபுரம் ராமு, முன்னாள் அரசு வழக்கறிஞர் வெங்கடேசன்,இளைஞர் அணி தேவா, ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக்,பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜன், டைமன் திருப்பதி, நிர்வாகிகள் திருப்புகழ் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன் மற்றும் திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள், அனைத்து வார்டுகளுக்கு கழக முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று உறுப்பினர் அட்டையை உறுப்பினர்களுக்கு நேரில் வழங்குவது,
வருகின்ற 2026 சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடிபழனிச்சாமி தலைமையில் அமைத்திட அனைவரும் பாடுபடுவோம் . சபதம் ஏற்போம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்