திருச்சியில் நடந்த இடைநிலை ஆசிரியர் தேர்வில் 1120 பேர் பங்கேற்பு. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு.
திருச்சியில் நடந்த இடைநிலை
ஆசிரியர் தேர்வில் 1120 பேர் பங்கேற்பு. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் தேர்விலல் திருச்சி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 1120 பேர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 4 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இவற்றில் பங்கேற்க 1167 பேர் பங்கேற்க அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அந்த வகையில் கோட்டை பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 326 பேர், ஹோலிகிராஸ் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 318, கண்டோன்மென்ட் ஆர் சி மேல்நிலைப்பள்ளியில் 333 பேர், ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 143 பேர் என 4 மையங்களிலிலும் மொத்தம் 1120 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். இதில் 47 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையக்களில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.