திருவானைக்காவல் ஆர்ப்பாட்டத்திற்கு தடை சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர், 50க்கும் மேற்பட்டோர் கைது.
திருவானைக்காவல் ஆர்ப்பாட்டத்திற்கு தடை சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர், 50க்கும் மேற்பட்டோர் கைது.
தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்கள் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து கோவில்களில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி திருவானைக்காவலில் நான்கு கால் மண்டபம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் இந்து முன்னணியினர் அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். இந்நிலையில் இன்று இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திடீர் என திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் அருகில் ஒன்று கூடி ஆர்பாட்டம் நடத்த முயன்றனர் , அப்பொழுது போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்ததை தொடர்ந்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து சாலையில் அமர்ந்து தமிழக அரசுக்கு எதிராக இந்து முன்னணியினர் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருவரங்கம் இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால் இந்து முன்னணி அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
பிறகு கைது செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.