பிரியாணி கடைக்காரர் மாயம். மனைவி போலீசில் புகார்.

பிரியாணி கடைக்காரர் மாயம். மனைவி போலீசில் புகார்.

திருச்சி தாராநல்லூர் செக்கடி பஜாரை சேர்ந்தவர் குமரவேல் (வயது 58)இவர் தாராநல்லூர் பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிரியாணி கடைக்கு மூன்று நாட்கள் விடுமுறை விட்டுருந்தார்.

இதையடுத்து விடுமுறை முடிந்து கடையை திறந்து வியாபாரம் செய்ய குமாரவேல்க்கு பணம் தேவைப்பட்டது. இதையெடுத்து தனது மனைவி பார்வதியிடம் பணம் கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குமரவேல் டீக்கடைக்கு சென்று வருகிறேன் என்று கூறி போனவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை இது குறித்து அவரது மனைவி பார்வதி காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரவேலை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்