ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் உடைப்பு ரவுடிகள் கைவரிசையா? போலிசார் விசாரணை.

ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் உடைப்பு ரவுடிகள் கைவரிசையா? போலிசார் விசாரணை.

திருச்சி பட்டர்வர்த் ரோட்டில் உள்ளது அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவில். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து ஆஞ்சநேயரை தரிசித்து செல்வார்கள். இந்த கோவிலை நேற்று இரவு பூசாரி பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் இன்று காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

மேலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இதேபோல் இந்த கோவிலில் இதுவரை மூன்று முறைக்கு மேல் உண்டியலை உடைத்து திருடியுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் யாரும் அங்குள்ள ரவுடிகளுக்கு பயந்து கொண்டு காவல் நிலையத்தில் புகாரே கொடுப்பதில்லை. என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த சம்பவம் குறித்து உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு கோவிலின் இரும்பு கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே சென்று உண்டியலை உடைத்து அதிலிருந்து  பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது . இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து மர்ம  ஆசாமிகள் பணத்தை திருடி சம்பவம்  பட்டவர்த்ரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்